தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம் - Vaikasi Matha Pramorsavam

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் பக்தர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம்

By

Published : May 17, 2019, 8:54 AM IST

காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது வரதராஜ பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக பக்தர்கள் புடை சூழ நடைபெறுவது வழக்கம்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் கோலாகலமாகத் தொடக்கம்

இதேபோல், இந்த ஆண்டு வைகாசி மாதம் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 5 மணிக்கு கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் வியாழன் அன்றும், கருட சேவை வரும் ஞாயிற்றுக் கிழமையன்றும் நடைபெறவுள்ளது,

மேலும், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவுள்ளதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விழா ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details