காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வையாவூர் சாலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்கி செல்வதற்குத் தற்காலிகமாக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிச் சந்தையில் நடைபெற்றுவரும் பணிகளை ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் காய்கறிகள் வாங்க வருகைதரும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகளை வாங்குகிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற 50 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு களத்தில் இறக்கப்பட்டனர்.