தமிழ்நாடு

tamil nadu

காஞ்சி கோயில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த 4 பேர் மீது வழக்கு!

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில், செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Published : Jan 3, 2021, 10:27 AM IST

Published : Jan 3, 2021, 10:27 AM IST

காஞ்சி கோயில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த 4 பேர் மீது வழக்கு!
காஞ்சி கோயில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த 4 பேர் மீது வழக்கு!

காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயில் என அழைக்கப்படும் உலக பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்களின் போது பெருமாளின் முன் பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவு ஐயங்கார்களிடம் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

தற்போது மார்கழி மாதம் ராப்பத்து உற்சவம் நடைபெறும் நிலையில், கோயிலுக்குள்ளேயே சாமி உள் புறப்பாடு நடைபெறுகிறது. அப்பொழுது பெருமாளின் முன்பு நீதிமன்ற உத்தரவின்படி பிரபந்தம் பாட முயன்ற தென்கலை பிரிவினரை வடகலை பிரிவினர் தடுத்து நிறுத்தியதால், இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 1) எட்டாம் நாள் ராப்பத்து உற்சவம் நடைபெற்றபோது, மீண்டும் பிரச்னை உருவானது. வடகலை, தென்கலை பிரிவினர் இடையே பிரபந்தம் பாடுவதில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீவித்யா, காவல் துறை துணை கண்காணிப்பாளர் மணிமேகலை ஆகியோர் கோயிலுக்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, வரதராஜ பெருமாள் கோயிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது. திருவராதன பூஜைகள் மட்டுமே நடக்கும். உற்சவம் நடைபெற வேண்டுமெனில் இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடி உரிய உத்தரவை பெற்று வரவேண்டும். மீறினால் இருதரப்பினர் மீதும் காவல் துறையில் புகார் செய்யப்படும் என உதவி ஆணையரும் நிர்வாக அறங்காவலருமான தியாகராஜன் தெரிவித்ததை தொடர்ந்து இருதரப்பினரும் கோயிலிலிருந்து கலைந்துச் சென்றனர்.

காஞ்சி கோயில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த 4 பேர் மீது வழக்கு!

இதனையடுத்து, வடகலை பிரிவைச் சேர்ந்த சிலர் கோயில் செயல் அலுவலர் தியாகராஜனை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தன்னை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது செயல் அலுவலர் தியாகராஜன் விஷ்ணு காஞ்சி காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வடகலைப் பிரிவை சேர்ந்த வாசுதேவன், ரங்கராஜன், சீனிவாசன், மாலோலன், ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...'வடகலை, தென்கலை பிரிவினர் கோயிலில் வாதங்கள் செய்யக்கூடாது' - இந்து அறநிலையத்துறை

ABOUT THE AUTHOR

...view details