உலகமெங்கும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒன்பது பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. தொடர்ந்து மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
கரோனா: காஞ்சிபுரத்தில் கடைகளை மூட உத்தரவு - கரோனா வைரஸ்
காஞ்சிபுரம்: கரோனா பரவுவதைத் தடுக்க காஞ்சிபுரத்தில் பால், மருந்தகங்களைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
karona
இந்நிலையில், கரோனா பரவுவதைத் தடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். மேலும் பால், மருந்தகங்களைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.