தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் சிவன் கோயில் குடமுழுக்கு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு - Kanchipuram Shiva Temple festival

காஞ்சிபுரம்: சிவன் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவன் கோயில் கும்பாபிஷேக விழா
சிவன் கோயில் கும்பாபிஷேக விழா

By

Published : Feb 8, 2020, 3:26 PM IST

காஞ்சிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கல்பாக்கத்தில் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் உள்ளே ஓங்கார ஆசிரமம் சார்பாக 10 தேவிகளுக்கு புதியதாக கோயில் கட்டப்பட்டது.

அதில், காளிதேவி, தாரா தேவி, புவனேஸ்வரி தேவி, நித்ய தேவி, திரிபுரபைரவி தேவி, சின்னமஸ்தா தேவி, தூமாவதி தேவி, பகளாமுகி தேவி, ராஜமாதங்கி தேவி, கமலாத்மிகா தேவி போன்ற பத்து தேவிகள் அடங்குவர். இதனையடுத்து இத்திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சிவன் கோயில் குடமுழுக்கு விழா

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் துரைசாமி ராஜி கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குடமுழுக்கை கண்டுகளித்தனர்.

குறிப்பாக, இந்தியாவிலேயே அசாம் மற்றும் காசியில் தான் 10 தேவிகளுக்கு ஒன்றாக கோயில் கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் தான் இக்கோயில் அமைக்கப்பட்டள்ளது.

இதையும் படிங்க:கோலாகலமாக நடந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details