செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூரில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி சுமார் 100 அடி தூரத்திற்கு இழுத்து வரப்பட்டவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.