காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாசத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் மற்றும் திருப்பாச்சூர் அருகே ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர் .
இதனையடுத்து அங்கு பணிபுரியும் பெண்களில் நேற்று முன்தினம் வயிற்று உபாதை மற்றும் மயக்கத்தினால் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலையை தனியார் நிறுவனம் விலக்கவில்லை என்பதை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தொழில் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை கைவிட செய்தனர்.