தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவனையில் கரோனா உபகரணங்கள் மாயம்! - Kanchipuram Police Investigation

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மாயமாகியுள்ள உயிர் காக்கும் உபகரணங்கள் குறித்து அம்மாவட்ட காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மருத்துவனையில் கரோனா உபகரணங்கள் மாயம்
அரசு மருத்துவனையில் கரோனா உபகரணங்கள் மாயம்

By

Published : Dec 22, 2020, 1:51 PM IST

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அம்மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இங்கு நாள்தோறும் உள்நோயாளிகள், புறநோயாளிகள் என இரு பிரிவுகளிலும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர்.

மேலும் கரோனா நோயாளிகளுக்காக சிறப்பு படுக்கைகள் கொண்ட வார்ட் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக காஞ்சிபுரம் எம்.பி எழிரசன் தனது தொகுதி நிதியிலிருந்து அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.

இந்நிலையில், கரோனா நோயளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்கள் மாயமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, வெண்டிலேட்டர், எக்ஸ்ரே அறையில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள், குளிர்சாதனப் பெட்டி, இன்வெண்டர் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் காணாமல் சென்றுள்ளதாக மருத்துவமனை இணை இயக்குநர் ஜீவா காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்

ABOUT THE AUTHOR

...view details