தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி பிறந்தநாள்: மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்த எம்.எல்.ஏ - காஞ்சிபுரம் எம்எல்ஏ

காஞ்சிபுரம்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியினை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சிவிஎம்பி. எழிலரசன் இன்று (ஜூன் 3) தொடங்கி வைத்தார்.

கருணாநிதி பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடுவதை தொடங்கி வைத்த காஞ்சிபுரம் எம்எல்ஏ
கருணாநிதி பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடுவதை தொடங்கி வைத்த காஞ்சிபுரம் எம்எல்ஏ

By

Published : Jun 3, 2021, 4:06 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 98ஆவது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) தமிழ்நாடு முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்படுகிறது.

மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் வனத்துறை சார்பில் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலகங்கள் வளாகத்தில் மாவட்ட வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சிவிஎம்பி. எழிலரசன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வனத்துறைப் பாதுகாவலர் ராமதாஸ், திமுக மாவட்ட அவைத்தலைவர் சிவிஎம்அ. சேகரன், நகரச் செயலாளர் சன் பிராண்ட் கே. ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி. சீனிவாசன், கூட்டுறவுத் துறை அலுவலர்களும், வனத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details