தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சியில் முதல்முறை வாக்காளர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு மையம் - காஞ்சிபுரம் மாவட்டம் செய்திகள்

காஞ்சிபுரம்: முதல்முறை வாக்காளர்களைக் கவர காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையத்தினை மாவட்டத் தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று (மார்ச் 10) திறந்துவைத்தார்.

காஞ்சிபுரம் செய்திகள்
முதல்முறை வாக்காளர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு மையம்

By

Published : Mar 10, 2021, 4:16 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதை உறுதிசெய்யும் வகையில், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இத்தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு துறைகளின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

முதல்முறை வாக்காளர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு மையம்

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களைக் கவரும் வகையிலும், அச்சமின்றி வாக்குப்பதிவு செய்வதில் பயிற்சி பெறும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி வாக்குப்பதிவு மையத்தை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்துவைத்து, மாதிரி வாக்குப்பதிவினை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசுதா, மகளீர் திட்ட அலுவலர் சீனிவாசராவ், பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, முதல்முறை வாக்காளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:வன்னியர்கள் இடஒதுக்கீடுக்கு தடை கோரி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details