தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த தடை - police bans various programs in kanchi

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த தடை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த தடை

By

Published : Aug 25, 2022, 12:44 PM IST

காஞ்சிபுரம்: எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள், அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்தநாள் அல்லது நினைவு நாட்கள் ஆகியவை தொடர்ந்து வரவுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது.

இந்த சமயங்களில் இரு பிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் 30 /2 இந்திய காவல் சட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நேற்று (ஆகஸ்ட் 24) முதல் 15 நாட்களுக்கு 30/2 இந்திய காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அவசரகால பணிகளுக்காக ஆயுதப்படை மற்றும் காவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details