காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவால் சிகிச்சை பலனின்றி கிராம நிர்வாக அலுவலர் உள்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

மேலும், கரோனா பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கவும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி முழுவதும் உள்ள 15 வார்டுகளிலும் தடுப்பு நடவடிக்கையாக நடமாடும் வாகனம் மூலம் கரோனா பரிசோதனை முகாம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:அனில் அகர்வாலை கொலை குற்றவாளியாக அறிவித்து உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்