காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீ பெரும்புதூர் (தனி), ஆலந்தூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 77 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை நடைபெற்று முடிந்து நிலையில், வேட்புமனு வாபஸ் பெற இறுதி நாளான நேற்று (மார்ச் 22) ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
காஞ்சிபுரத்தில் 75 வேட்பாளர்கள் போட்டி! - Kanchipuram district news
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் தொகுதியில் 15 பேரும், உத்திரமேரூர் தொகுதியில் 20 பேரும், ஸ்ரீ பெரும்புதூர் தனி தொகுதியில் 15 பேரும், ஆலந்தூர் தொகுதியில் 25 பேரும் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் எண்ணிக்கை 75ஆக உள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...’பதவி சுகம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்றார்’ - ஆ.ராசா தாக்கு