தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் 907 பேர் சுகாதாரத் துறையின் மூலம் கண்காணிப்பு - ஆட்சியர் தகவல் - Kanchipuram collector pressmeet

காஞ்சிபுரம்: 907 பேர் சுகாதாரத் துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

kanchipuram-collector-pressmeet
kanchipuram-collector-pressmeet

By

Published : Apr 2, 2020, 10:38 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய காஞ்சிபுரத்திலிருந்து மூன்று பேரும், சாலவாக்கம் பகுதியிலிருந்து ஒருவரும் என மொத்தமாக டெல்லி தவ்ஹீத் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்த நான்குபேரும் கண்டறியப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டு வையாவூர் சாலையில் திறக்கப்பட உள்ளது. இதுவரை அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்ற நான்கு கடைகள் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 907 பேர் சுகாதாரத் துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முதமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை அனைத்து நியாயவிலை கடைகளிலும் சமூக இடைவெளி நடைமுறையைப் பின்பற்றி நாளொன்றுக்கு 70 பேருக்கு மட்டுமே வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காற்றில் பறந்த அரசின் அறிவுறுத்தல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details