காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தலைமைத் தேர்தல் அலுவலர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறுகையில்;
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,122 வாக்குச்சாவடிகள் அமையப்பெற்றிருக்கிறது.
- 91 இடங்களில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
- கண்காணிப்பு படக்கருவிகள் மூலம் வாக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. 37 லட்சம் வாக்காளர்களில் 20 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான 1,700 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
- வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, பந்தல் வசதி, வாக்களிக்க காலதாமதம் ஏற்பட்டால் தங்க வைப்பதற்கான அறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வாக்களிக்க வசதியாக வாக்காளர்கள் கொண்டு வர வேண்டிய 12 ஆவணங்கள் குறித்து விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.
- திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.