தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை - Kanchipuram players victory

காஞ்சிபுரம் :64ஆவது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.78.50 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை
விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை

By

Published : Dec 4, 2020, 6:45 PM IST

தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற 64ஆவது விளையாட்டுப் போட்டிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள்பட்ட 23 வீரர்கள், 24 வீராங்கனைகள் என மொத்தம் 47 பேருக்கு ரூ.78.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 2 வீரர்கள், 16 வீராங்கனைகள் தங்கப்பதக்கமும், 17 வீரர்கள், 4 வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கமும் 6 வீரர்கள், 5 வீராங்கனைகள் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

இதனையொட்டி வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளை கெளரவப்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமார் ஊக்கத் தொகையினை காசோலையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) நாராயணன், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவா் சாமி சத்தியமூா்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ். ரமேஷ் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details