தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் மாதிரி வாக்குப் பதிவு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்! - காஞ்சிபுரம் சட்டப்பேரவை தேர்தல் செய்திகள்

காஞ்சிபுரம்: சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான மாதிரி வாக்குப் பதிவு பணிகளை இன்று (டிச. 31) மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அனைத்து கட்சியினர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரத்தில் மாதிரி வாக்குப் பதிவு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!
காஞ்சிபுரத்தில் மாதிரி வாக்குப் பதிவு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!

By

Published : Dec 31, 2020, 5:08 PM IST

காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வாணிப சேமிப்பு கிடங்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் வருகின்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள 3304 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2341 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 2518 விவிபேட் கருவிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் 35 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 145 கட்டுப்பாட்டு கருவிகள், 190 விவிபேட் கருவிகள் பழுதாகி இருந்தது தெரியவந்ததையடுத்து இவற்றை சீரமைக்கும் பணியும் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் பயன்படுத்த உள்ள இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று (டிச. 31) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரத்தில் மாதிரி வாக்குப் பதிவு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!

மேலும் இந்த இயந்திரங்கள் சரியாக உள்ளதா? என்பதை அறியும் வகையில் மாதிரி வாக்குப்பதிவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 போலி வாக்காளர்கள் மற்றும் அவர்களுக்கான சின்னத்துடன் ஒரு நோட்டா சின்னம் பொருத்தப்பட்டு ஆயிரம் வாக்குகள் வீதம் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், “தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் கருவிகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நிறைவு பெற்று மாதிரி வாக்குப்பதிவு இன்று (டிச. 31) நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது 1379 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா பரவல் இருந்தால் ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் வீதம் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்.

அதன்படி, காஞ்சிரம் மாவட்டத்தில் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தால் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க...சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்:பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details