காஞ்சிபுரம்: தேசிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை காசோலையாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
தேசிய அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி பயிற்சி பெறுவதற்கு ஊக்கத் தொகையினை காசோலையாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
2018-19ஆம் ஆண்டிற்கான தேசிய அளவு விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 2 வீரர்கள், ஒரு வீராங்கனை தங்கப்பதக்கமும், 2 வீராங்கனைகள் வெள்ளிப்பதக்கமும் என மொத்தம் 8 மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றனர்.
இவர்களில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூபாய் 6 ஆயிரம், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 32 ஆயிரத்துகான ஊக்கத் தொகை இம்மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி பயிற்சி பெறுவதற்கு ஊக்கத் தொகையினை காசோலையாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ். ரமேஷ், வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.