தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ரூ.23.43 கோடி லாபம் ஈட்டி சாதனை - காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி

காஞ்சிபுரம்: மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 49 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூபாய் 342.48 கோடி பயிர் கடன் வழங்கி, நடப்பாண்டில் ரூ.23.43 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

Bank
Bank

By

Published : Jan 23, 2021, 2:55 PM IST

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 854 சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 106ஆவது பொது பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், நிர்வாக குழு இயக்குநர்கள் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். பேரவை கூட்டத்தில் கணேசன் வங்கியின் புதிய இணையதள சேவையினை தொடங்கி வைத்து பேசுகையில், 2019-20 நிதியாண்டில் பயிர் கடன் திட்டத்தில் 49 ஆயிரத்தி 10 விவசாயிகளுக்கு ரூபாய் 342.48 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல 28 ஆயிரத்தி 328 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூபாய் 194.94 கோடி பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் கடனாக 116 நபர்களுக்கு ரூபாய் 304.85 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 341 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 2556.03 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் வங்கி 23.43 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details