தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூச்சுத்திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - அரசு மருத்துவமனை செவிலியர் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம்: அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்கள் ஆன பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்க தவறியதால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

kanchipuram
baby death due to apnea

By

Published : Dec 10, 2019, 8:06 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புக்குழி பகுதியைச் சேர்ந்த சரவணன் - கார்த்திகா தம்பதிக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குழந்தையை கார்த்திகா செவிலியிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், செவிலி சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்ததால் குழந்தைக்கு அதிகமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பெற்றோர்கள் மருத்துவ செவிலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை

இதனைத் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பாளரிடம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்து சம்பந்தபட்ட செவிலி மற்றும் மருத்துவரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தபின் இறந்த குழந்தையை பெற்றுச் சென்றனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க: தனியார் இடங்களில் விளம்பரப் பலகை வைப்பது தொடர்பான வழக்கு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details