தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழை எளியோருக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு! - அம்மா உணவகம்

காஞ்சிபுரம்: ஊரடங்கு நேரத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களில் நாள்தோறும் இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

unavagam
unavagam

By

Published : Apr 25, 2020, 8:14 PM IST

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனை மற்றும் விளக்கடி கோவில் தெரு ஆகிய இரு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், சாலையோரம் வசித்த மக்கள், வெளியூர்களிலிருந்து வந்து தங்கியிருப்போர் மற்றும் ஆதரவற்றோர் உணவின்றி அவதிப்பட்டனர். எனவே, அவர்களுக்கு மூன்று வேளை உணவும் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஒரு மாதமாக, இரு அம்மா உணவகங்களிலும், நாள்தோறும் 1,000 பேருக்கு, இலவச உணவு வழங்கப்படுகிறது. இதில், நகராட்சி துாய்மைப் பணியாளர்கள், 550 பேரும் அடங்குவர். ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கும் வகையில், அம்மா உணவகத்திற்கு சிலர், தேவையான பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

ஏழை எளியோருக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு!

அம்மா உணவகத்திற்கு வரும் அனைவரிடமும், முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் இலவச அம்மா உணவகம் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details