காஞ்சிபுரம்:அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம் என்பார்கள். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதமன்று அம்மன் கோவில்களில் திருவிழாக்களும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பக்தர்கள் கூட்டம் அனைத்து அம்மன் கோவில்களும் ஆடி மாதத்தில் கலைக்கட்டும்.
குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி வெள்ளியன்று தங்கள் குல தெய்வமான அம்மன் கோவில்களில் பெண்கள் தங்களது குடும்பத்தினரோடு சென்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவதுண்டு. அதேபோல் அன்றைய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுவது வழக்கம்.
தும்பவனத்தம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை ஒட்டி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு..! அவ்வகையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ தும்பவனத்தம்மன் கோவிலில் இன்று(ஜூலை22) ஆ பம்பை அடித்து அம்மன் பாடல்கள் பாடி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தும்பவனத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகர் மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கேற்றியும் தும்பவனத்தம்மனை வழிபட்டனர்.
இதையும் படிங்க:பொறியியல் படிப்பில் 500 இடங்களில் விளையாட்டு பிரிவிற்கு சான்றிதழ் சரிபார்ப்பு