உலக பிரசித்தி பெற்றதும், பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
அதையொட்டி தினமும் காலை, மாலை என இருவேளைகளில் ஏகாம்பரநாதர் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்துவருகிறார். அந்த வகையில் நேற்று (மார்ச் 24) இரவு பிரபல உற்சவமான வெள்ளி தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல்வேறு மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் உற்சவர் ஏலவார்குழலி அம்பாளுடன் மேளதாளங்கள் அதிர்வேட்டுகள் முழங்க நான்கு ராஜ வீதிகளில் எழுந்தருளி திரு வீதி உலா பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.