தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 3, 2021, 9:40 AM IST

ETV Bharat / state

காஞ்சி அத்திவரதர் கோயில் உண்டியலில் ரூ.51.68 லட்சம் வசூல்!

காஞ்சி அத்திவரதர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் உண்டியலில் இருந்து 51 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 89 கிராம் தங்கமும் கிடைக்கப்பெற்றதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

காஞ்சி அத்திவரதர் கோயில் உண்டியலில் ரூ.51.68 லட்சம் வசூல்!
காஞ்சி அத்திவரதர் கோயில் உண்டியலில் ரூ.51.68 லட்சம் வசூல்!

காஞ்சிபுரம்: வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய திருத்தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அத்திவரதர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள 5 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கோயில் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயா தலைமையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா முன்னிலையில் கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்ட 5 உண்டியல்கள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட உண்டியல்களில் இருந்த காணிக்கையை கோயில் பணியாளர்கள் குழுவினர், பொதுமக்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காஞ்சி அத்திவரதர் கோயில் உண்டியலில் ரூ.51.68 லட்சம் வசூல்!

இதில், பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ரூ. 51 லட்சத்து 86ஆயிரத்து 327 பணமாகவும் , 89 கிராம் தங்கம், 556கிராம் வெள்ளிப் பொருள்களும் கிடைக்கப்பெற்றதாக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க :'ராகுல் இளம் தலைவர்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்' - குஷ்பூவின் குசும்பு

ABOUT THE AUTHOR

...view details