தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கைப்பேசிக்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர்! - ஆட்சியர்

காஞ்சிபுரம்: பார்வையற்றோர், வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசியைப் பெற்றிட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

kanchepuram collector
kanchepuram collector

By

Published : Jan 5, 2021, 8:48 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்," பார்வையற்றோர் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன்பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசி, 2020-2021 ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது.

கைப்பேசி பெறவிரும்புவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைபெற்றவராகவும், 18 வயது நிரம்பிய இளங்கலை கல்வி (Under Graduate)கல்லுாரியில் பயிலும் மாண-மாணவியராகவோ, வேலைவாய்ப்பற்ற பட்டதாரி மாணவ-மாணவியராகவோ, சுயதொழில் மற்றும் தனியர் துறையில் பணிபுரிபவராகவோ இருக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசு துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலே குறிப்பிட்ட தகுதிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள், தங்களது தேசிய அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), உணவு பொருள் வழங்கல் அட்டை( ரேசன் கார்டு), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID) ஆகியவற்றின் நகல்கள், கல்லூரியில் படிப்பவராக இருந்தால் கல்லூரியில் படிப்பதற்கான சான்றிதழ், சுயதொழில் செய்பவராக இருந்தால் சுயதொழில் புரிவதற்கான சான்று, வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள் பட்டய சான்றிதழ் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள ஊரக வளர்ச்சித்துறை கட்டிட கீழ்தளத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் வரும் 11ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்:044-27431853இல் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details