தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா! - kancheepuram district news

காஞ்சிபுரம் : பஞ்சபூத தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும், பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அருள்பாலித்தனர்.
அருள்பாலித்தனர்.

By

Published : Mar 23, 2021, 4:52 PM IST

பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தின் ஐந்தாம் நாளில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கைலாச பீட 10 தலை ராவணன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேள தாளங்கள் முழங்க சிவ வாத்தியங்கள் ஒலிக்க 10 தலை ராவணன் வாகனம் 4 ராஜவீதிகளில் வீதி உலா வந்தது. இந்த வீதி உலாவை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா

ABOUT THE AUTHOR

...view details