தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது - arrested

சொத்து மதிப்பினை மறுமதிப்பீடு செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காஞ்சிபுரம் சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது
லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

By

Published : Aug 9, 2021, 7:26 PM IST

காஞ்சிபுரம்: தூலுக்கந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவர் தனது சொத்தினை பதிவு செய்வதற்காக காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் எண்-2 இணை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது சொத்து மதிப்பு அதிகப்படியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மறு மதிப்பீடு செய்வதற்காக மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்ய சார் பதிவாளர் சீனிவாசனிடம் பாலு கேட்டுள்ளார்.

லஞ்சம்

மாவட்ட பதிவாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என சீனிவாசன் கூறியுள்ளார்.

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

இதுகுறித்து பாலு காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுறுத்தலின்
படி பாலு இன்று(ஆக.9) சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை சீனிவாசனிடம் வழங்கியுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் சீனிவாசனை, ஊழியர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details