காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் சட்டத்திற்கு புறம்பாக சவுடு மணல் கடத்தி தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான காவல்துறையினர் அந்த இடத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். அப்போது உரிய அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த முரளி, சுரேஷ் ஆகிய இரண்டு பேரை கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, பொக்லைன் இயந்திரத்தை காவல்துறையினர் கைப்பற்றியதுடன் தலைமறைவான செல்வம், கோவிந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சவுடு மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது! - sand smuggling arrest
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
lorry