தொன்மையான பொருள்களை விற்பதில் பிரபலமான கிரண் ராவ், தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் தங்க நகை, வைரங்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கிரண் ராவின் மேலாளர் தயாநிதி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகளை மதுரையில் காட்சிக்கு வைத்து விற்பனை செய்துவிட்டு மீதமிருந்த நகைகளுடன் சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, செங்கல்பட்டு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் என்று கூறி, சிலர் தயாநிதி வைத்திருந்த 11 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகளை பறிமுதல் செய்தனர். நகைகளை சென்னை அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
'தகவல் அளித்தால் தக்க சன்மானம்' - கொள்ளை வழக்கில் எஸ்.பி. அறிவிப்பு! - sp
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே இரு தினங்களுக்கு முன்பு நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய-புகைப்படத்தில் இருக்கும் நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதியமான் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தை தயாநிதி நாடினார். அப்படி ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து, செங்கல்பட்டு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காஞ்சிபுரம் சரக காவல்துறை அதிகாரி தேன்மொழி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதியமான் ஆகியோர் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சந்தேகத்திற்குரிய ஒருவரின் புகைப்படம் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரைப் பற்றி தகவலறிந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் அதியமான் அறிவித்துள்ளார்.