காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க பெருநகராட்சி ஊழியர்கள் பணம் கேட்பதாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் பொது மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.
சடலங்களை ஒப்படைக்கப் பணம் பெற்ற பெருநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்! - corpses
காஞ்சிபுரம்: கரோனாவால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பணம் பெற்ற பெருநகராட்சி ஊழியரை, பெருநகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம் செய்தார்.
அதில், பெருநகராட்சியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் குமரவேல், கரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யப் பணம் வாங்கிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பணம் பெற்ற ஊழியர் குமரவேலுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை ஒப்படைக்கப் பணம் பெறும் பெருநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெருநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.