காஞ்சிபுரம்: கலைஞர் பட்டு நெசவாளர் கைத்தறி விற்பனை சங்கத்தில் மேலாளராக, சின்ன காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (55) பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு இன்று (ஜூன் 19) காலை பணிக்குவந்த முனியப்பன், அலுவலக உதவியாளரை கீழே இருக்கச் சொல்லிவிட்டு, இரண்டாவது மாடியிலுள்ள ஆவணங்களைச் சரிபார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது அலுவலகத் துப்புரவுப் பணியாளர், பணி செய்யச் சென்றபோது, இரண்டாவது தளத்தில் முனியப்பன் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளதைக் கண்டுள்ளார். இது குறித்த காஞ்சிபுரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.