காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே உள்ள காலூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி இன்று (டிச.17) கலந்து கொண்டார்.
அதன்பின் அருகிலிருந்த காலூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வகுப்பறைகளுக்குச் சென்று பார்வையிட்டு மாணவ-மாணவிகளிடம் உரையாடினார்.
அப்போது, 5ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியையாக மாறி பாடம் நடத்தினார். வகுப்பறையின் கரும்பலகையில் எழுதி இருந்த ஆங்கில இலக்கணப் பாடத்தை படிக்க வைத்து, அதற்கான விளக்கத்தை மாணவர்களுக்குக் கூறினார்.
மாணவர்களுக்குப் பாடம் நடத்திய காஞ்சிபுரம் ஆட்சியர் பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு முறையாகப் பாடம் நடத்த வேண்டும் எனக் கூறி ஆலோசனைகளை வழங்கினார். ஆசிரியையாக மாறி பாடம் நடத்தி அசத்திய மாவட்ட ஆட்சியரின் செயலைக் கிராம மக்களும், ஆசிரியர்களும் வியந்து , வெகுவாகப் பாராட்டினார்கள்.
இதையும் படிங்க: கோவில்பட்டி அரசுப் பள்ளி மாணவிகளின் சாதனை முயற்சி