காஞ்சிபுரம் சுற்று வட்டாரப்பகுதிகளில், தளர்வுகளற்ற ஊரடங்கால் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு காஞ்சிபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி ஏற்பாட்டின்பேரில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த செவிலிமேடு, குறுவிமலை, பிள்ளையார் பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை காவல் துறையினர் நேரடியாகச் சென்று வழங்கினர்.