காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 260 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 115 சாதாரண படுக்கைகளும் முழுவதுமாக நோயாளிகளால் நிரம்பியிருக்கிறது.
தகன மையத்தில் தொற்றால் இறந்தவரகளின் சடலத்துடன் பல மணி நேரம் காத்திருக்கும் உறவினர்கள்! - crematorium full in kancheepuram
காஞ்சிபுரம்: எரிமேடை மயானத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்ய, உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்
இந்நிலையில், கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் உள்ள எரிமேடை மயானத்திற்கு உறவினர்கள் கொண்டு செல்கிறார்கள். அங்கு 2 நவீன எரிமேடை மயானம் மட்டுமே உள்ளதால், கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வைத்துக் கொண்டு உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.