தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திவரதரை மூன்று லட்சம் பேர் வரை தரிசிக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் - மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: விடுமுறை தினம் என்பதால் இன்று சுமார் மூன்று லட்சம் பேர் அத்திரவரதரை தரிசனம் மேற்கொள்ளும் விதமாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

kancheepuram

By

Published : Jul 28, 2019, 6:21 PM IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றுவருகிறது. நேற்று வரை 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இன்று ஏகாதசி மற்றும் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, “இன்று ஏகாதசி என்பதால் அதிகப்படியான மக்கள் அத்திரவரதரை தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர். ஒரு மணி நிலவரப்படி 1.30 லட்சம் பேர் தரிசனம் மேற்கொண்டுள்ளனர். 2 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள்வரை சாமி தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. பக்தர்கள் சோர்வு மற்றும் உபாதைகள் குறித்து கண்காணிக்க 34 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்களால் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு வசதியாக 240 கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

ஒன்றாம் தேதி முதல் முதல் வடக்கு மாட வீதி மற்றும் பெரிய தோட்டம் ஆகிய இரண்டு பகுதிகளில் கூடுதல் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டு சுமார் 16 ஆயிரத்து 20 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. இன்று இதுவரை 33 பேர் உடல் சோர்வு காரணமாக மயக்கம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details