தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி: மாவட்ட ஆட்சியர் அறைக்கு பக்கத்து அறை மூடல் - கரோனா எதிரொலி

காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பணியாற்றிய பணியாளர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அறையின் அருகாமையில் உள்ள அறை பூட்டப்பட்டது.

kpm
kpm

By

Published : Apr 23, 2021, 11:51 AM IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்று தளத்தில் பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. இதில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பணி மேற்கொள்ளும் அறை முதல் மாடியில் அமைந்துள்ளது. மாவட்ட ஆட்சியரின் அறை அருகே உள்ள புதிதாக தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் அலுவலகத்தில் சுமார் 20 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில், நான்கு பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அவர்கள் பணிபுரிந்த அலுவலக அறையை நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்துப் பூட்டினர். மேலும், அந்த அலுவலகத்தில் பணியற்றும் பணியாளர்கள், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அறைக்கு அருகிலிருக்கும் அறை கரோனா தொற்று காரணமாக பூட்டப்பட்டது ஆட்சியர் வளாகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details