காஞ்சிபுரம் மாவட்டம், ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு பகுதி, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
மொத்தம் 672 படுக்கை வசதிகள் உள்ள இந்த மருத்துவமனையில், 375 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவாக செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு படுக்கைகள் முழுவதுமாக நிரம்பி, கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், படுக்கை வசதிகள் இல்லாமல் ஏராளமான கரோனா நோயாளிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று கரோனா சிகிச்சைப் பிரிவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.