தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா விளையாட்டு மைதானத்தில் கரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் திறந்து வைத்தார். - Corona ward

காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தினை தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று(ஜூன் 3) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கொரோனா சிகிச்சை மையம்
கொரோனா சிகிச்சை மையம்

By

Published : Jun 4, 2021, 2:25 AM IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில், ரயில்வே சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் லேசான அறிகுறிகளுடன் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், 200 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

இம்மையத்தினை இன்று(ஜூன்3) பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்து, மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details