தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சியில் இடிதாக்கி ஒருவர் உயிரிழப்பு - இடிதாக்கி உயிரிழப்பு

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே இடிதாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death
Death

By

Published : Sep 9, 2020, 2:51 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்குள்பட்ட சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சிறு மாங்காட்டில் கன்னி அம்மன் கோயில் தெருவில் சந்திரசேகர் (30) என்பவர் வசித்துவந்துள்ளார். இவருக்கு மீனா (24) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனது.

சந்திரசேகர் கறவை மாடுகளை வைத்துக்கொண்டு பால் கறக்கும் தொழில் செய்துவந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வேளையில் பால் கறந்துகொண்டு இருக்கும்போது திடீரென அவர் மீது இடி தாக்கியதில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்திரசேகரை, சுங்குவார்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

மருத்துவமனையில் சோதித்துப் பார்த்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். உடனே மீண்டும் சிறு மாங்காட்டில் உள்ள சந்திரசேகர் வீட்டிற்கே உடலைக் கொண்டு சென்றுள்ளனர்.

தகவலறிந்த சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இடிதாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details