காஞ்சிபுரம்: சக்தி தலங்களில் முதன்மையானதாகவும், உலகப்பிரசித்தி பெற்ற தலமாகவும் விளங்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவம் கடந்த 9 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
பத்தாவது நாளான இன்று(அக்.15) விஜயதசமியை ஒட்டி, காமாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கோயிலில் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையான இன்று, காலை முதலே உள்ளூர், வெளியூர் என ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வந்து, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர்.