தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜமாபந்தி கூட்டம்; கடைசி நாளில் 859 மனுக்கள் பெறப்பட்டன! - திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலக

காஞ்சிபுரம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கடைசி நாளான இன்று பயனாளிகளுக்கு மொத்தமாக 859 மனுக்களும், 168 சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஜமாபந்தி கூட்டம்

By

Published : Jun 12, 2019, 11:54 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் 1428 பசலி வருவாய் தீர்வாயம் என்கின்ற ஜமாபந்தி கூட்டம் இறுதிநாளாக10ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மக்களவை உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன் கலந்துகொண்டு மனுதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

மே 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்த ஜமாபந்தி கூட்டத்தில் மொத்தமாக 859 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தீர்வு செயல்பட்ட மனுக்கள் 473 நேரடி விசாரணைக்காக 386 மனுக்களும் பெறப்பட்டன.

இதில் பட்டா மாறுதலுக்கு 67 மனுக்கள் வந்தன. அதில் 31 மனுக்கள் ஏற்கப்பட்டு 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு நிலுவையில் 22 மனுக்கள் வைக்கப்பட்டுள்ளன. உட்பிரிவு பட்டாவுக்கு 558 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 29 மனுக்கள் ஏற்கப்பட்டு 74 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 55 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

பட்டா நகல் 10 பெறப்பட்டு பத்தும் ஏற்கப்பட்டது. இலவச வீட்டு மனை பட்டா 109 மனுக்கள் பெறப்பட்டன 85 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 24 மனுக்கள் நிலுவையில் உள்ளன.முதியோர் உதவித்தொகைக்காக 58 மனுக்கள் பெறப்பட்டன அதில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டு 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஜமாபந்தி கூட்டம் கடைசி நாளில் 859 மனுக்கள் பெறப்பட்டன!

மொத்தமாக ஜமாபந்தி கூட்டத்தில் 168, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன இதை பெற்று பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இதற்கான செலவுகள் ஒரு கோடியே 71 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஜமாபந்தி கூட்டங்கள் அடிக்கடி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details