காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு காலை முதலே தொடங்கி அனைவரும் விறுவிறுப்பான வாக்களித்துவருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குள்பட்ட அப்பாராவ் பகுதியைச் சேர்ந்த லியாகத் ஷெரீப் என்பவரின் மகனான இம்தியாஸ் ஷெரீப் இன்றைய தினம் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிட அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் வந்து காஞ்சிபுரம் தாமல்வார் தெருவிலுள்ள புனித சூசையப்பர் ஆரம்பப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.