காஞ்சிபுரம்:புதியதாகத் தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம், அவர்களை ஆதரித்த தேர்தல் பரப்புரை கூட்டமானது காஞ்சிபுரம் மண்டித் தெரு பகுதியில் நடைபெற்றது.
இதில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாகத் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அன்புமணி பேசுகையில்,
“நீட் குறித்து பொது விவாதம் செய்ய திமுக அதிமுக தயாராக உள்ள நிலையில் நான் விவாதிக்கத் தயாராக உள்ளேன். நீட்டுக்கு காரணம் யார் என்று நான் கூறுகின்றேன். அது குறித்து மக்கள் முடிவு செய்துகொள்வார்கள்.
நீட்டுக்கு முதல் காரணம் காங்கிரஸ்தான். இரண்டாவது காரணம் திமுக. மூன்றாவது காரணம் பாஜக. நான்காவது காரணம் அதிமுக. நீட்டிற்கு இவர்கள் நால்வரும்தான் காரணம்.
மு.க. ஸ்டாலின் நீட் குறித்து விவாதம் செய்ய நாங்கள் தயார் என்று சொல்லுகிறார். அந்தச் சவாலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியும் ஏற்றுக்கொள்கிறார். நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். மது விலக்கு குறித்து விவாதிக்க நான் சவால் விடுகின்றேன்" என்றார்.
தமிழ்நாட்டைக் குடிகார நாடாக மாற்றியது யார்?
திமுக அதிமுக விவாதிக்கத் தயாரா? நான் தயார் எனக் குறிப்பிட்ட அவர் இருவரும் வாருங்கள் விவாதிக்க நான் தயார் என்றும் தமிழ்நாட்டில் யார் மதுவை முதலில் கொண்டுவந்தது, எவ்வுளவு காலம் மது விலக்கு தமிழ்நாட்டிலிருந்தது, அதை மீண்டும் தொடங்கியது யார்?
மதுக்கடைகளை டாஸ்மாக் ஆக மாற்றியது யார்? டாஸ்மாக்கிற்கு யார் பார் திறந்தது? பார்களில் குடிகாரன்களாக மாற்றி இந்தத் தமிழ்நாட்டினை குடிகார நாடாக மாற்றியது குறித்து அங்கு விவாதிக்கலாம் என்றும்,