காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று சர்வதேச பழங்குடி மக்கள் தினம்( ஆகஸ்ட் 9) கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பாக மாபெரும் கலைவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் தலைவர் க.ஜெகதீசன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல ஆணையர் எல்.தனலட்சுமி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், இவ்விழாவில் ஆடல்பாடல், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் நாள் பழங்குடியின மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் உரிய உரிமைகளை பெறுவதற்காகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இருளர், மலைக்குறவர், நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் கோரிக்கைகளான, வன உரிமை பாதுகாப்பு சட்டம், சாதிச் சான்றிதழ், குடிமனை கொடி மனைப்பட்டா, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, இலவச மின் இணைப்பு, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தியும் இந்த விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.