தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் தொழிலாளிகளிடம் வாக்குச் சேகரித்த உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் - விவசாய தொழிலாளிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

உத்திரமேரூர் அருகே அதிமுக வேட்பாளர் வி. சோமசுந்தரம் வேர்க்கடலை பறித்துக்கொடுத்து தொழிலாளிகளிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

விவசாய தொழிலாளிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
விவசாய தொழிலாளிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

By

Published : Mar 31, 2021, 4:56 PM IST

உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் உத்திரமேரூர் தொகுதிக்குள்பட்ட உத்திரமேரூர் ஒன்றியத்தின் கிராமப்புறப் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

வேளாண் தொழிலாளிகளிடம் தீவிர வாக்குச் சேகரிப்பு
அதன் ஒரு பகுதியாக இன்று புள்ளம்பாக்கம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அருகிலிருந்த வேளாண் நிலத்தில் தொழிலாளர்கள் வேர்க்கடலையைச் செடியிலிருந்து பிரித்தெடுக்கும் பணியினை மேற்கொண்டுவந்தனர்.
இதனைக் கண்டு அங்கு சென்ற வேட்பாளர் வி. சோமசுந்தரம் வேளாண் தொழிலாளர்களுக்கு உதவிசெய்யும் வகையில் செடிகளிலிருந்து வேர்க்கடலையை அவர்களுக்குப் பிரித்து எடுத்துக் கொடுத்து தீவிர வாக்குச் சேகரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details