தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2020, 6:15 AM IST

ETV Bharat / state

புதிய சிப்காட் சிமா திறன் மேம்பாட்டு மையத்தை திறந்துவைத்த அமைச்சர்

காஞ்சிபுரம்: புதியதாக உருவாக்கப்பட்ட சிப்காட் சிமா திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கிவைத்தார்.

minister mc sampath
minister mc sampath

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுகோட்டை தொழிற் பூங்காவில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதியதாக உருவாக்கப்பட்ட சிப்காட் சிமா திறன் மேம்பாட்டு மையம் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்துகொண்டு மேம்பாட்டு மையத்தை தொடங்கிவைத்தார். அதன்பின் திறன் பயிற்சி மையத்தில் உள்ள இயந்திரக் கருவிகள், தையல்கூடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டார்.

பின்னர் தொழிற்சாலை நிர்வாகிகள் முன்னிலை அவர் சிறப்புரையாற்றிப் பேசுகையில், "தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் தொழில் பயிற்சி பெற்ற முதல்நிலை மாவட்டங்கள் என்றும், கோயமுத்தூர், திருப்பூர் உள்ளிட்டவை தொழில் வளர்ச்சியில் இரண்டாம் நிலையிலுள்ள மாவட்டங்களாக உள்ளன.

இந்தத் திறன் மேம்பாட்டு மையம் மிக முக்கியம் வாய்ந்தது. இந்தப் பயிற்சியும் மையத்தின் மூலம் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு உடனே வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்" என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் ஏழை எளிய இளைஞர்கள், பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்குhd பயிற்சி கொடுக்க இருங்காட்டுகோட்டை சிமாவுடன் இணைந்தது இந்தப் புதிய முயற்சி.

உலகத் தரத்துக்கு நிகராக தொழில்நுட்பத்துடன் பயிற்சி அளித்து மனிதவளத்தை மேம்படுத்துகிறார்கள். இது தொழில் துறையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details