தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75வது சுதந்திர தின விழா - தேசிய கொடியை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சியர் மரியாதை - காஞ்சிபுரம்

இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

75வது சுதந்திர தின விழா
75வது சுதந்திர தின விழா

By

Published : Aug 16, 2021, 6:20 AM IST

Updated : Aug 16, 2021, 6:28 AM IST

காஞ்சிபுரம்: இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று (ஆக 15) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 76 பயனாளிகளுக்கு 49 லட்சத்து 33 ஆயிரத்து 657 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர், அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். கரோனா நோய் தொற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளி, மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

Last Updated : Aug 16, 2021, 6:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details