தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபாக்ஸ்கான் வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை! - பாரத் எஃப் ஐ எச் லிமிடெட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

ஃபாக்ஸ்கான் நிறுவன வளாகத்தில் இயங்கும் பாரத் எஃப் ஐ எச் லிமிடெட் ( Bharat FIH limited) என்ற தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், அதிக வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஃபாக்ஸ்கான் வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!
ஃபாக்ஸ்கான் வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

By

Published : Dec 21, 2021, 9:31 PM IST

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் ஆகியப் பகுதிகள் தொழிற்சாலைகள் நிறைந்தவையாகத் திகழ்கின்றன.

இங்கு ஆட்டோமொபைல், செல்போன், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் சர்வதேச முன்னணித் தொழிற்சாலை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

அந்த வகையில் பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை சுங்குவார்சத்தித்தில் இயங்குகிறது. இந்நிறுவன வளாகத்தில் சாம்சங், ஒப்போ, எம்.ஐ, ஐபோன், விவோ உள்ளிட பல்வேறு நிறுவனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.

5 மணிநேரமாக தொடர் சோதனை

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் எம்.ஐ செல்போனிற்கு பாரத் எஃப்ஐஎச் லிமிடெட் ( Bharat FIH limited) எனும் நிறுவனம் உதிரி பாகங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அதிக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து இன்று (டிச.21) சென்னையில் இருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்ஸ்கான் தொழிலாளா்கள் தங்கியுள்ள உணவு விடுதியில், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுங்குவார்சத்திரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 17 மணி நேரமாக நடைபெற்ற தொடர் போராட்டமானது பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அதே வளாகத்தில் இயங்கும் நிறுவனத்தின் மீது வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Siva Sankar Baba மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதிவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details