தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தின் 63ஆவது ஆட்சியர் பொறுப்பேற்பு! - 63rd Collector of Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மருத்துவர் எம். ஆர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் எம். ஆர்த்தி
செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் எம். ஆர்த்தி

By

Published : Jun 16, 2021, 10:41 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 63ஆவது மாவட்ட ஆட்சியராக இன்று (ஜுன் 16) மருத்துவர் எம்.ஆர்த்தி அரசுக் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, நான்கு பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதிய நிதியை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்திருந்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். கரோனா நோயை ஒழிக்க தடுப்பூசி தான் ஒரு சிறந்த ஆயுதம். எனவே மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் எம். ஆர்த்தி

மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை என்னிடம் நேரில் சொல்லலாம். நான் எந்நேரமும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய தயாராக இருக்கிறேன். அலுவலர்களும், மக்களும் இணைந்து வளர்ச்சிப் பணிகளை அதிகமாக செய்து காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒரு சிறந்த மாவட்டமாக மாற்ற வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: விழுப்புரத்தின் 21ஆவது ஆட்சியராக பொறுப்பேற்ற மோகன்

ABOUT THE AUTHOR

...view details