தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 5, 2019, 7:53 AM IST

ETV Bharat / state

அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை!

காஞ்சிபுரம்: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாங்காடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சிக்குள்பட்ட 4ஆவது வார்டு, பட்டூர், வி.எம்.எஸ். நகர் பகுதிகளில் மழைநீர் செல்ல வழித்தடம், தெருக்களில் மின் விளக்குகள் அமைத்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மாங்காடு பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தனர்.

அலுவலகத்தில் முக்கிய அலுவலர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்களுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு மழைநீர் செல்ல கால்வாய் வசதிகள் இல்லை. சிறிய மழைக்கே இந்தப் பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடும்.

மேலும் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை, இந்தப் பகுதியில் குடிநீர் வராததால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும் மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்" என எச்சரித்தனர்.

மாங்காடு காவல் துறையினர், பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களிடம் புகார் மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்துசென்றனர்.

பெண்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்!

மேலும் மாவட்டச்செய்திகளைப் படிக்க:

பாலாற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு !

வெண்ணெய் உருண்டை கல்" - ஆன்மிகத்தின் ஆக்கமா? அறிவியலின் தாக்கமா?

ABOUT THE AUTHOR

...view details